Tuesday, 7 January 2025
உடல்பருமன்
Sunday, 25 July 2021
ஊஞ்சல்🎠 ஆடுவது எதற்காக....
ஊஞ்சல்🎠 ஆடுவது எதற்காக.... காரணம் வேண்டுமா? இதை படியுங்கள்...!!
பாரம்பரிய ஊஞ்சல்...!!
🎠 தமிழ் பாரம்பரியத்தில் ஊஞ்சல் விளையாட்டானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும். ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம். ஊஞ்சல் விளையாட்டினை சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என எல்லா வயதினை உடையவர்களும் ஆடுவார்கள். ஆனால் இன்றைய சூழலில் பெரும்பாலும் சிறுவர்கள் மாத்திரமே ஆடுகின்றனர்.
🎠 குறிப்பாக வீட்டில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக்கூடியது ஊஞ்சல்தான். முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது.
🎠 ஊஞ்சல் மூன்று வகையாகும். அவை கிறுக்கு ஊஞ்சல், உத்து ஊஞ்சல், ஆட்டு ஊஞ்சல் என்பனவாகும். இன்று சிலருக்கு ஊஞ்சல் என்றால் என்ன என்பதுகூடத் தெரியாதவர்களே அதிகம்.
🎠 ஊஞ்சல் ஆடுவது கடவுளுக்குகூட மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் என்பதால்தான், கோவில்களில் இறைவனை ஊஞ்சல்களில் வைத்து சீராட்டும் பெருமைமிகு நிகழ்வுகள் இன்றும் நடந்துக் கொண்டிருக்கிறது.
ஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா?
🎠 சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும்.
🎠 ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் தோன்றுகிறது.

🎠 ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.
🎠 திருமணங்களில் 'ஊஞ்சல் சடங்கு" இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது.
🎠 வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஊஞ்சல் ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.
🎠 கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற்சியை தினமும் செய்தால் முதுகுத்தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது.
🎠 இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுபவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும்.
🎠 ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது.
🎠 கோபமாக இருக்கும்போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும்.
🎠 நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும்போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறுசுறுப்பாகிறது.
இல்லத்திற்கு அழகு சேர்க்கும் கலைப்பொருட்களில் ஊஞ்சலும் ஒன்று.....
மறக்காமல் வீடுகள்தோறும் ஊஞ்சல் ஆடுவோம்...
Leia Mais…Sunday, 13 June 2021
Sunday, 29 December 2019
பசித்தால் மட்டும் உண்ணுங்கள்
மருந்து மாத்திரைகளை புறக்கணிங்கள். பசித்தால் மட்டும் உண்ணுங்கள்.
நமது வயிற்றில் எந்த மிக்ஸி, கிரைண்டர் அல்லது அம்மி கல் இது போன்ற எதுவும் இல்லை, ஆனால் நாம் அவசர அவசரமாக கொஞ்சம் கூட மெல்லாமல் முழுசு முழுசா முழுங்குற எல்லாத்தையும் இந்த வயிறு பெர்பக்ட்டா அரைச்சு வெளியே தள்ளுதே எப்படினு என்னைக்காவது யோசிச்சு இருக்கீங்களா?
உணவை ஜீரணம் செய்றதுக்காகவே வயித்துல இயற்கையாகவே HCL ஆசிட் சுரக்குது. அந்த ஆசிட்ல ஒரு சேவிங் ப்ளைட போட்டீங்கனா கூட அது கரைஞ்சு போய்டும், அந்த அளவுக்கு பவர் புல்லான ஆசிட் அது.
வயித்துல சுரக்குற HCLலுக்கும் கெமிக்கல் லேப்ல இருக்குற HCLக்கும் ஒரே வேதியியல் வாய்ப்பாடு தான், ஒரே குறியீடு தான், ஒரே பண்புகள் தான் ஆனால் லேப்ல இருக்குற HCL ல்ல வயித்துகுள்ள இன்ஜக்ட் பண்ணா என்ன ஆகும்னு தெரியுமா?
வயிறு, குடல் பூரா வெந்து போய்டும். ஏன்னா வயித்துல சுரக்குறது Bio அமிலம், லேப்ல தயாரிச்சது உயிர்ச்சத்து இல்லாத கெமிக்கல்.
இதே மாதிரி தான், உடம்புல விட்டமின் இல்ல, புரோட்டின் இல்ல, கால்சியம் இல்ல, மக்னீசியம் இல்ல அப்படின்னாலும் அத உணவு வழியா தான் உடம்புக்கு கொடுக்கனுமே தவிர
பன்னாட்டு மெடிக்கல் மாபியாக்கள் தயாரிக்கும் ஆய்வக மருந்து மாத்திரைகள் மூலமாக அல்ல.
அப்படி லேப்ல தயாரிச்ச மருந்து மாத்திரை தின்னா என்ன ஆகும்னா... லேப்ல தயாரிச்ச HCL ஆசிட்ட ஒரு சிரஞ்சி வழியா வயித்துக்குள்ள இன்ஜக்ட் பண்ணா என்ன ஆகுமோ அதே தான் ஆகும். என்ன ஆசிட் அதோட தீவிரத்தால உடனே குடல வேக வைச்சுடும், இந்த மருந்து மாத்திரைகள் ஸ்லோவா, அலுங்காம குலுங்காம உங்க குடல காலி பண்ணிடும்.
அப்பறம் ஒரு அஞ்சு ஆறு வருசம் கழிச்சு One Fine day ல உங்களுக்கு இத்தன நாள் மருந்து மாத்திரை எழுதி கொடுத்த அதே டாக்டர் சொல்லுவாரு...
"தொடர்ந்து மருந்து மாத்திரை சாப்புட்டதால உங்க குடல் புண்ணாயிடுச்சு, ஒரு வேற கேன்சரா கூட இருக்கலாம், எதுக்கும் ஒரு பயாப்சி பண்ணி மும்பை லேப்க்கு அனுப்பி செக் பண்ணிடலாம்னு"
அப்பறம்...?
அப்பறம் என்ன?
அதே டாக்டர், கீமோ தெரபி ன்ற பேருல மறுபடி மருந்து உங்கட்ட காஸ்ட்லியான மருந்து மாத்திரைகள விக்க ஆரம்பிப்பாரு.
இதுக்கு மேல என்ன நடக்கும்னு நான் சொல்ல முடியாது. நீங்களே யோசிச்சு பாருங்க. உங்க பக்கத்து வீட்டுல, சொந்த பந்தம் வீட்டுல இத நடக்குதா இல்லையானு கவனிங்க.ப்ளீஸ்.
மருந்து மாத்திரைகளை புறக்கணிங்கள்.
பசித்தால் மட்டும் உண்ணுங்கள்
தாகம் எடுத்தால் தண்ணீர் அருந்துங்கள் (காய்ச்சல் சளி இருமல் தொந்தரவுகள் இருந்தால் மட்டுமே லேசான சூட்டில் வெந்நீர் அருந்த வேண்டும்)
உடலுக்கு தேவையான ஓய்வு அளியுங்கள்
உறக்கம் வருகையில் உறங்குங்கள், குறிப்பாக இரவில் நீண்ட நேரம் விழித்து இருக்காதீர்கள்
பழங்கள், காய்கறிகள், கீரைகள் நிறைய எடுத்து கொள்ளுங்கள்
பழச்சாறு, சூப், தண்ணீர் நிறைய குடியுங்கள்
நிதானமான மனநிலையில் உங்களை வைத்திருங்கள்
நோய்கள் நிச்சயம் குணமாகும், உடல் கண்டிப்பாக மீண்டு வரும். அதற்கான சக்தி உடலுக்கு தரப்பட்டுள்ளது.
இது நம்புங்கள் நடக்கும் என்கிற பூச்சாண்டி லாம் கிடையாது. நம்பிக்கையே இல்லாமல் மேலே சொன்னவற்றை பின்பற்றினாலும் குணமாதல் நிச்சயம்.
ஏனெனில் இந்த ஆங்கில வணிக மயமாக்கப்பட்ட மருத்துவ முறைகளின் வயது வெறும் 150 ஆண்டுகள் தான்
ஆனால் மேலே சொன்ன முறைகளின் அடிப்படையில் தான் மனித சமூகம் பல்லாயிரம் ஆண்டுகளாக நோய்களிலிருந்து மீண்டு வாழ்ந்து வந்துள்ளது என்பதே இதற்கு சாட்சி.
நலவாழ்வு சிறக்க வாழ்த்துக்கள். Leia Mais…
Thursday, 1 August 2019
உலக தாய்ப்பால் வாரம்
உலகம் முழுவதும்
மகப்பேறு மருத்துவர்களால் இந்த வாரத்தில் தோராயமாக 540 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்,நடத்தப்படுகின்றன. தனியார் தொண்டு நிறுவனங்கள்,
அரசு சார்பிலும் விழாக்கள் நடைபெறுகின்றன.
சர்வதேச அமைப்புகளான உலக சுகாதார அமைப்பு, குழந்தைகள் நல அமைப்பு ஆகியவை இந்த வாரத்தில் விழிப்புணர்வு பேரணி, பிரச்சாரங்கள் நடத்தி வருகின்றன.
1992ஆம் ஆண்டு ’வேர்ல்டு அலையன்ஸ் பிரஸ்ட் ஃபீடிங் ஆக்ஷன்’ (வாபா) அமைப்பால் முதல் முறையாக தாய்ப்பால் வாரம் கொண்டாடப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் இந்த வாரத்திற்கென ஒரு தீம் தேர்வு செய்யப்படும். உதாரணமாக கடந்த ஆண்டு ”தாய்மார்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தி” என்ற தீம் உருவாக்கப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டும் ஒரு தீம் உருவாக்கப்பட்டு, அதுகுறித்து பிரச்சாரங்கள் நடைபெறும்.
தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிக்கவே இந்த வாரம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. அரசு அலுவலகங்களில் விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன. அதிகமாக தாய்ப்பால் குடித்து கொழுக் மொழுக் என்று இருக்கும் 6 மாத குழந்தைக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கப்படுகிறது.
தாய்ப்பால் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்:
குழந்தை பிறந்த உடன் சுரக்கும் தாய்ப்பால் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதில் குழந்தையின் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது.
குழந்தை பெற்றெடுத்த ஆரோக்கியமான பெண்ணுக்கு தினமும் 850 மில்லி அளவு பால் சுரக்கும். இதனால் பெண்ணின் உடல் கூடுதலாக 600 கலோரிகள் செலவழியும். அதனால் தான் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.
ஆறு மாதங்களாவது குழந்தைகளுக்குப் பாலூட்டுவதால் நுண்ணறிவுத் திறனும் நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கிறது. குழந்தைக்கு அடிப்படை ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன.
தாய்ப்பால் கொடுப்பது குறித்து சில போலி நம்பிக்கைகள் உண்டு . அதில் மார்பக அளவை வைத்து தாய்ப்பால் சுரப்பை கணிப்பார்கள். ஆனால் அது முற்றிலும் தவறானது
தாய்ப்பால் கொடுப்பது குறித்த மூட நம்பிக்கைகள்:
தாய்ப்பால் ஊட்டும் பெண்களின் மார்பக அளவுக்கும், தாய்ப்பால் சுரப்புக்கும் சம்பந்தமே இல்லை. சில பெண்களுக்கு மார்பகம் பெரியதாக இருக்கும். ஆனால், தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கும். இன்னும் சிலருக்கு மார்பகம் சிறியதாக இருக்கும். அதேநேரம் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.
மார்பகத்தில் உள்ள திசு சுரப்பிகளின் எண்ணிக்கையையும், அவை தூண்டப்படும் விதத்தையும் பொறுத்துதான் ஒரு பெண்ணுக்கு எந்த அளவுக்கு தாய்ப்பால் சுரக்கும் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்கிற ஆர்வம் கூட ஒரு பெண்ணின் தாய்ப்பால் சுரப்பு திசுக்களை தூண்டிவிடும். எனவே தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில், அதுகுறித்து பாலூட்டும் தாய் சிந்தித்துக்கொண்டே இருக்க வேண்டுமாம். Leia Mais…
Tuesday, 9 July 2019
பலம் தரும் லிச்சி!
- இதயமும், ஈரலும் உடலின் பிரதான பாகங்கள். இந்த இரண்டு உடல் உறுப்புகளையும் ஆரோக்கியமாக வைப்பதில் லிச்சிக்கு முதலிடம்.
- பொதுவாக லிச்சி மரத்தின் பழம், விதை, பூ, வேர்ப்பட்டை ஆகிய அனைத்துக்கும் மருத்துவ பயன்பாடு அதிகம்.
- லிச்சி பழம் இனிப்பான ரோஜா மலரின் வாசனை தரும். பழத்தை தினமும் உண்டு வந்தால் இதயம் நல்ல ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பாக வேலை செய்யும்.
- ஈரல் உடலின் பல்வேறு விஷங்களால் நொந்து போயிருக்கும். லிச்சியின் பழச்சாறு இந்த விஷத்தன்மையை குறைத்து ஈரலுக்கு உரம் ஊட்டும்.
- தாகத்தை தணிக்கும்.
- இந்தோனேஷியாவில் இதன் விதைகளை குடல்சார்ந்த நோய்களை குணப்படுத்தவும், மலேசியாவில் நரம்பு நோய்களை சரிப்படுத்தவும் பயன்படுத்துகிறார்கள்.
- இதன் பூக்களும், வேர்ப்பட்டையும் தொண்டையில் உண்டாகும் பல்வேறு நோய்களை தீர்க்க பயன்படுகிறது.
- புகைபழக்கம், பாக்கு பழக்கத்தினால் தொண்டைப்பகுதியை ரணப்படுத்தியிருப்பவர்கள் லிச்சி பழங்களை உண்பது நலம்.
- சீனாவில் பூச்சி கடித்து விட்டால் லிச்சி மரத்தின் இலைகளை சாறு எடுத்து பிழிந்து விடுகிறார்கள்.
- லிச்சி பழத்தில் உடலின் கட்டுமான உணவு என்று சொல்லப்படும் புரதம் 1.1 கிராம்,
- தோல்தடிப்பாயும், சொரசொரப்பாகவும் மாறும் தவளைசொறி நோயை கட்டுப்படுத்தும் தாவர கொழுப்பு 0.2 கிராம்,
- இன்றைக்கு பலருக்கும் அன்றாட பணியில் சிக்கலை ஏற்படுத்தும் மலச்சிக்கலை கட்டுப்படுத்தி குடலின் தசைநார்களை சீராக இயங்க வைக்கும் நார்ப்பொருள் 0.5 கிராமும், எலும்பு, பல் பலம் பெற உதவும் கால்சியம் 10 மில்லிகிராமும், கால்சியம் உடலில் சேர உதவும் பாஸ்பரஸ் 35 மிகி, உடல் வெளுத்து போவதை தடுத்து நிறுத்தும் இரத்த சிவப்பணுக்களின் கட்டமைப்புக்கு முக்கியமான இரும்பு சத்து 0.7 மிகி,
- நாக்கு வீங்குவது, சிவந்து பிளவுபடுதல், வாய்ஓரங்களில் வெடிப்பு உண்டாவதை தடுத்து நிறுத்தும் ரைபோபிளேவின் 0.06 மிகி,
- சளி உருவாகாமல் தடுத்து தலைசுற்றல், கிறுகிறுப்பை தடுக்கும் வைட்டமின் சி 31 மிகி, மக்னீசியம் 10 மிகி, பொட்டாஷியம் 159 மிகி, தாமிரம் 0.30 மிகி களோரின் 3 மிகி உள்பட எராளமான சத்துக்கள் லிச்சி பழத்தில் தாராளமாக உள்ளன.
- அவ்வப்போது இதனை உணவில் சேர்த்துக் கொண்டால், உடல்நலன் நிச்சயம் நன்றாக இருக்கும் என்பதில் மாற்றமில்லை.
Tuesday, 18 June 2019
இயற்கை உணவு உண்ண ஆரம்பித்த பிறகு..
(1) உயரத்திற்கேற்ற எடை தானாகவே வந்து விடும். களைப்பில்லாமல் நீண்ட நேரம் வேலை செய்ய உடலுக்கு தெம்பு கிடைக்கும்.
(2) தோல் மிருதுவாகவும், இலாஸ்டிக் தன்மையுடனும் சுருக்கமில்லாமலும் இருக்கும். மற்ற முறைகள் ( உடற்பயிற்சி, ஜிம், உணவுக் கட்டுப்பாடு,ம ருந்து மாத்திரை மூலம் எடை குறைப்பது போல் இந்த முறையில் தோலில் சுருக்கங்கள் விழாது.
(3) கூந்தல் மென்மையாக இருக்கும்.
(4) அழகு க்ரீம்கள், ஷாம்பூ, எண்ணெய் போன்றவை தேவையிருக்காது. தேவைப்பட்டால் ஏதாவது தானிய மாவு (பாசிப் பயிறு, கடலை மாவு) போன்றவற்றை ஷாம்பூவுக்கு பதிலாக உபயோகிக்கலாம். வெந்தயத்தை 8 மணிநேரம் ஊற வைத்து அரைத்து ஷாம்பூவாக உபயோகிக்கலாம். கூந்தல் மென்மையாவதுடன் உடலும் குளிர்ச்சியாக இருக்கும்.
சோற்று கற்றாழையை தோலை மிருதுவாக்கவும், கூந்தலுக்கு ஷாம்பூவாகவும் உபயோகிக்கலாம். கூந்தல் மென்மையாவதுடன் உடலும் கு ளிர்ச்சியாக இருக்கும். உள்ளிருக்கும் ஙுங்கு போன்ற பகுதியை நீரில் அலசி விட்டு உண்ணலாம். அது பெண்களுக்கு மாதவிடாய் தொந்தரவு களுக்கும், வெள்ளை படுதலுக்கும் ஒரு அரிய மருந்தாகும். இதை மிகவும் எளிதாக தோட்டங்களிலும், தொட்லிகளிலும் வளர்க்கலாம். மிகக் கு றைந்த அளவு தண்ணீரே போதுமானது.
நன்றி: திருமதி இரதி லோகநாதன், கோவை
Wednesday, 1 May 2019
மாதுளம் பழ ஜூஸ்
Tuesday, 4 December 2018
தக்காளி.. தக்காளி.
Wednesday, 14 November 2018
மணப்பெண்ணே இது உங்களுக்கு...
முகத்தில் சுருக்கம் நீங்க
''மூன்று மாதத்திலிருந்து, முகூர்த்தம் வரை மணப்பெண்களை எப்படி தயார் செய்து, என் னென்ன மேக்அப் செய்கிறார்கள்'' என்பதை விளக்குகிறார், நேச்சுரல்ஸ் இருபாலர் ஸ்பா அன்ட் சலூன் பிரைடல் டிசைன் ஸ்டுடி யோவின் இயக்குநர் வீணா குமாரவேல். முன்பெல்லாம் மணப்பெண் அலங்காரம் என்பது முகூர்த்தம் நடக்கும் அன்று காலை யில் மணப்பெண்ணுக்கு மேக்அப் போடுவது மட்டும்தான். இப்போது முகம் மட்டுமல்ல, உடல் முழுவதும் அழகாக்கப்படுகிறது. மட்டு மின்றி உடை, நகைகள் போன்றவை அனைத் தும் அழகுக்கு அழகு சேர்க்கும் விதத்தில் தேர்ந்தெடுத்து முழுமை படுத்தப்படுகிறது.3 மாதங்களுக்கு முன்பு
இன்றைய சுற்றுப்புற சூழல் அதிக மாசு கலந்ததாக இருக்கிறது. பெண்களின் உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை, தூக்க நிலை போன்றவைகளிலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. அதிக வேலைப்பளுவால் பெண்கள் மனஉளைச்சலுக்கும் உள்ளாகுகிறார்கள். அதனால் அவர்கள் ஆரோக்கியம் பாதிக் கப்பட்டு, அழகும் கெடுகிறது. 3 மாதத்திற்கு முன்பிருந்தே அவர்கள் தங்கள் வாழ்க்கை முறையில் இருக்கும் முரண்பாடுகளை நீக்க வேண்டும். தினமும் 45 லிட்டர் தண்ணீர் பருகவேண்டும்.
அசைவ உணவுகளின் அள வைக்குறைத்து, பெருமளவு காய்கறி, பழங் களை உணவில் சேர்க்கவேண்டும். மனதை அமைதிப்படுத்தும் பொழுதுபோக்கில் ஈடுபட வேண்டும். தினமும் 8 மணிநேரம் நன்றாகத் தூங்கவேண்டும். உடலை நன்றாக பராமரித்து, அழகில் ஆர்வம் செலுத்தவேண்டும். அழகைப் பொறுத்தவரையில் முதலில் வீட்டிலே அதற்குரிய செயல்முறைகளைத் தொடங்க வேண்டும். ஓட்ஸ், பால் பவுடர் ஆகிய இரண்டையும் ஓரன்ஜ் ஜூசில் கலந்து வாரத்தில் ஒருநாள் உடம்பு முழுவதும் பூச வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து மென்மையான ஸ்பான்ஞ்ச் அல்லது கை விரலால் மிதமாக தேய்த்துக்கொடுக்க வேண்டும். பின்பு கழுவிவிட வேண்டும். இவ்வாறு செய்தால் சருமத்தில் இருக்கும் ''இறந்த செல்கள்'' நீங்கிவிடும். பால் பவுடரில் இருக்கும் லாக்டிக் ஆசிட் சருமத்தில் பதிந்து பளபளப்பை கொடுக்கும்.
அழகு நிலையத்தில் மணப்பெண்களுக்காக இப்போது ''மில்க் பாத்''
பெண்கள் ''வையின் தெரபி''யும் எடுத்துக்கொள்ளலாம். முதலில் ஸ்கிரப் செய்தல் பின்பு ஆவி பிடித்தல் அடுத்து வையின் கலந்த நீரில் குளிக்கவைத்தல்
எண்ணெய்த்தன்மை சருமத்தை கொண்டவர் கள் காலை, மதியம், இரவு மூன்று வேளையும் முகத்தை நன்றாக தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும். தினமும் எலுமிச்சம் பழச்சாறை முகத்தில் தேய்த்து பத்து நிமிடத்தில் கழுவி விடவேண்டும். இது லேசான எரிச் சலைத் தரும். இதை விரும்பாதவர்கள் சாத்துக் குடி ஜூசை முகத்தில் தேய்த்து கழுவ வேண்டும். சந்தனப் பவுடரை பன்னீர் அல்லது சுத்தமான தண்ணீரில் கலந்து முகத்தில் பூசி, 15 நிமிடங்களில் கழுவவேண்டும். தினமும் இவ்வாறு செய்தால் ஒரு வாரத்தில் முகத்தில் இருக்கும் எண்ணெய்த்தன்மை குறைந்து விடும். பின்பு வாரத்தில் ஒருமுறை மட்டும் இவ்வாறு செய்தால் போதும். எண்ணெய்த் தன்மை குறைந்ததும் இந்த வீட்டு சிகிச்சையை நிறுத்தி விடலாம். ஆனால் கருப்புப் புள்ளி, திட்டு, படை, முகப்பரு, நிறமாற்றம் போன் றவை இருப்பவர்கள் அழகு நிலையங்களிலே இந்த சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியி ருக்கும். கூந்தல் பராமரிப்பை பொறுத்தவரையில் மூன்று மாதத்திற்கு முன்பிருந்தே
கூந்தல் ''டிரை ஹெயர்'' ஆக இருந்தால் தே.எண்ணெய், விளக்கெண்ணெய், கிளிசரின், குக்கிங் வினிகர் போன்றவைகளை தலா ஒரு தேக்கரண்டி எடுத்து கண்டிஷனருடன் கலந்து
கூந்தலில் பிரச்சினைகள் இருந்தால் அழகு நிலைய சிகிச்சைகள் அவசியப்படும். ஸ்பா, ஸ்மூத்தனிங் போன்று தேவைப்படும் சிகிச்சைகளை 15 நாட்களுக்கு ஒருமுறை பெறவேண்டியிருக்கும்.
ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டில் செய்ய வேண்டியவை: நோர்மல் ஸ்கின் நாமக்கட்டி பவுடர், முல்தானிமுட்டி இரண்டையும் முகத்தில் பூசி கழுவ வேண்டும். எண்ணெய்ச் சருமம் என் றால் முல்தானிமுட்டி மட்டும் பூச வேண்டும். அழகு நிலையத்தில்
ஒரு வாரத்திற்கு முன்பு:
முகூர்த்தத்தன்று மணப்பெண்ணுக்கு முழுமையாக எப்படி அலங்காரம் செய்யப் படுமோ அது போன்ற அலங்காரத்தை ஒரு வாரத்திற்கு முன்பே செய்து பார்த்துவிட வேண்டும். உச்சி முதல் பாதம் வரை அலங்கரித்துவிட்டு, அதில் ஏதாவது மாற் றங்கள் தேவையா? உடை, அணிகலன்களில் ஏதாவது மாற்றம் தேவையா? என்பதை எல்லாம் பார்த்துவிட வேண்டும். இப்போது பெரும்பாலும் மணமகனும் வந்து, மணப்பெண்ணின் முழு அலங்காரத்தை பார் வையிடுகிறார். அவருடைய விருப்பத்தையும் தெரிவிப்பார். போட்டோவும் எடுத்துக் கொள் வார். இந்த அலங்காரத்திற்கு மூன்று மணி நேரம் ஆகிவிடும்.
மூன்று நாட்களுக்கு முன்பு:
இரண்டு நாட்களுக்கு முன்பு:
நிறைய தண்ணீர் பருகவேண்டும். நன்றாகத் தூங்கி ஓய்வெடுக்க வேண்டும். நிறைய பழச்சாறு பருகவேண்டும்.
திருமணத்தன்று:
முகூர்த்தத்திற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, முழுமையான மணப்பெண் அலங் காரத்தை தொடங்க வேண்டும். ஏற்கனவே டிரையல் செய்து பார்த்திருந்தால் வேகமாக, சிறப்பாக மணப்பெண் அலங்காரத்தை செய்து முடித்துவிட முடியும். வரவேற்பு அலங்காரம் இப்போது மிக நவீனமாகி இருக்கிறது. சிம்பிள் அதே நேரத்தில் மொடர்ன் தோற்றத்தில் மணப் பெண்கள் ஜொலிக்க விரும்புகிறார்கள். அதற்கு தக்கபடி செய்யப்படும் மணப்பெண் அலங்காரம் அதிக வரவேற்பினை பெறுகிறது.









