Monday 29 August 2011

உடல் பருமன் - கொஞ்சம் கவனியுங்க..

உடல் பருமன் சுட்டு (Body Mass Index):
                          உடல் பருமன் சுட்டு எண் (Body Mass Index) என்பது ஒருவரது எடை எந்த அளவிற்கு உள்ளது என்பதை அறிய உதவும் ஒரு உத்தேச கணக்கு முறை. ஒருவரது உயரத்தையும் அவரது எடையையும் கொண்டு அவரது உடல் பருமன் சரியான அளவில் உள்ளதா என்பதை இதன்மூலம் கண்டறியலாம். அதிக எடை என்பது அதிகப்படியான கொழுப்பு சத்தினால் உண்டாவது. இந்த உடல் பருமன் சுட்டு மூலம் ஒருவரது உடலில் உள்ள கொழுப்புச் சத்தினை நேரடியாக கணக்கிட முடியாது. இருப்பினும் அவரது உடலில் அதிகப்படியான கொழுப்பு சத்து உள்ளதா என்பதை அறிந்து கொள்ள முடியும்.
உங்கள் எடை ஆரோக்கியமானதா? உங்கள் உயரத்திற்கு ஏற்ற எடையை நீங்கள் கொண்டுள்ளீர்களா? என்பதை இந்த உடல் பருமன் கணக்கீட்டின் மூலம் நீங்களும் அறிந்துகொள்ளலாம்.





சுட்டு எண் உடலமைப்பு ஆரோக்கிய குறைவிற்கான வாய்ப்புகள்
<18.5 குறைவான எடை நடுநிலை
18.5-24.9 ஆரோக்கியமான எடை குறைவு
25-29.9 அதிக எடை அதிகம்
30-34.9 மிகவும் அதிக எடை மிகவும் அதிகம்
>35 மிக மிக அதிகப்படியான எடை மிக மிக அதிகம்
உடலின் எடைக்கும், உயரத்திற்கும் உள்ள தொடர்பை கீழ்கண்ட சூத்திரத்தின் மூலம் கணக்கிட்டு, விடையாகக் கிடைக்கும் எண்ணைக் கொண்டு உங்கள் உடல் எடையைப் பற்றிய குறிப்புகள் தரப்படுகின்றன.
எடை (கிலோவில்)
சுட்டு எண் = ------------------------------ X 10000
(உயரம் செ.மீ. X உயரம் செ.மீ.)
உடல் பருமன் சுட்டு எண்ணைக் கொண்டு உடல் ஆரோக்கிய குறைவு ஏற்பட உள்ள வாய்ப்புகள் குறித்து விளக்கும் வரைபடம் இது.


நன்றி .. http://www.arusuvai.com

Leia Mais…

Thursday 25 August 2011

பெண்கள் மூக்கு/காது குத்திக்கொள்வது ஏன் தெரியுமா..?

அறிவியல் விளக்கம்!

மூக்கு மற்றும் காது குத்திக்கொள்வது ஏன் என உங்களுக்கு தெரியுமா? அதாவது ஆண்களின் மூச்சுக்காற்றை விட பெண்களின் மூச்சுக்காற்றுக்கு சக்தி  அதிகம்.

இதனால் பெண்கள் மத்தியில் நிற்பவர்களுக்கு அசௌகரியமாக இருக்கும் இதனால் பெண்கள் மூக்கு குத்தி கொள்ளும் வழங்கம் உருவானது. மூக்கு குத்துவதினாலும், காது குத்துவதினாலும் உடலிலுள்ள வாயுக்கள் வெளியேறுகின்றன.

உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க மூக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெப்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும்.

அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும். சிறுமியர் மூக்குத்தி அணிவதில்லை. பருவப் பெண்களே அணிகிறார்கள்.

ஏனெனில் பருவ வயதை அடைந்த பெண்களுக்கு தலைப்பகுதியில் பகுதியில்   சிலவிதமான வாயுக்கள் இருக்கும். இந்த வாயுக்களை வெளிக் கொண்டு வருவதற்குத்தான் மூக்குக் குத்தப் படுகிறது.

மூக்குக் குத்துவதால் பெண்கள், சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறுகள், நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் என்பவற்றிலிருந்து பாதுகாக்கப் படுகிறார்கள்.

அந்தக்காலத்தில் ஆண்களும் காது குத்திக்கொள்வது இதனால்தான் ம்ம்ம்…… இந்தக்காலத்திலும் ஆண்கள் காது குத்தும் வழங்கம் வந்துவிட்டது ஆனால் கவரிங் எந்த பிரயோசனமும் இல்லை வெறும் அழகுக்கு மட்டுமே தவிர ஆரோக்கியத்துக்கு சரிவராது.

நன்றி:www.jaffnawin.com

Leia Mais…