Sunday 25 July 2021

ஊஞ்சல்🎠 ஆடுவது எதற்காக....

 ஊஞ்சல்🎠 ஆடுவது எதற்காக.... காரணம் வேண்டுமா? இதை படியுங்கள்...!!

பாரம்பரிய ஊஞ்சல்...!!



🎠 தமிழ் பாரம்பரியத்தில் ஊஞ்சல் விளையாட்டானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும். ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம். ஊஞ்சல் விளையாட்டினை சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என எல்லா வயதினை உடையவர்களும் ஆடுவார்கள். ஆனால் இன்றைய சூழலில் பெரும்பாலும் சிறுவர்கள் மாத்திரமே ஆடுகின்றனர்.


🎠 குறிப்பாக வீட்டில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக்கூடியது ஊஞ்சல்தான். முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது.


🎠 ஊஞ்சல் மூன்று வகையாகும். அவை கிறுக்கு ஊஞ்சல், உத்து ஊஞ்சல், ஆட்டு ஊஞ்சல் என்பனவாகும். இன்று சிலருக்கு ஊஞ்சல் என்றால் என்ன என்பதுகூடத் தெரியாதவர்களே அதிகம்.


🎠 ஊஞ்சல் ஆடுவது கடவுளுக்குகூட மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் என்பதால்தான், கோவில்களில் இறைவனை ஊஞ்சல்களில் வைத்து சீராட்டும் பெருமைமிகு நிகழ்வுகள் இன்றும் நடந்துக் கொண்டிருக்கிறது.


ஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா?


🎠 சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும்.


🎠 ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் தோன்றுகிறது.



🎠 ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.


🎠 திருமணங்களில் 'ஊஞ்சல் சடங்கு" இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது.


🎠 வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஊஞ்சல் ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.


🎠 கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற்சியை தினமும் செய்தால் முதுகுத்தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது.


🎠 இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுபவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும்.


🎠 ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது.


🎠 கோபமாக இருக்கும்போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும்.


🎠 நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும்போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறுசுறுப்பாகிறது.


இல்லத்திற்கு அழகு சேர்க்கும் கலைப்பொருட்களில் ஊஞ்சலும் ஒன்று.....


மறக்காமல் வீடுகள்தோறும் ஊஞ்சல் ஆடுவோம்...

Leia Mais…

Sunday 13 June 2021

குளிர் சாதன பெட்டிக்கு வெளியே..

 குளிர் சாதன பெட்டிக்கு வெளியே வைக்க வேண்டிய பொருட்கள்...





Leia Mais…